Thursday 4 March 2010

Q & A: நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்

கேள்வி: நீள் காற்சட்டை அணியும் போது நின்ற நிலையில் சிறு நீர் கழிக்க வேண்டியுள்ளது. இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?


பதில்: நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முறையற்ற, பண்பாடற்ற, அகௌரவமான ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. மேலும், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது தெறித்து உடல், உடை போன்றன அசுத்தமடையவும் இடமுண்டு.

'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள் என எவரும் உங்களுக்கு அறிவித்தால், அதனை நீங்கள் நம்ப வேண்டாம். அன்னார் அமர்ந்த நிலையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாக இருந்தார்கள்' என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

ஆயினும், ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் உட்பட இன்னும்; பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸில் ஹுதைபா(ரலி), நபி(ஸல்)அவர்கள் நின்றவாறு சிறுநீர் கழித்ததை தான் கண்;டதாகத் தெரிவித்துள்ளார். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிந்து வைத்திருந்ததையே அறிவித்துள்ளார். அதற்கு மாற்றமாகவும் நபி (ஸல்) அவர்கள் நடந்திருக்கின்றார்கள் என்பது நபித்தோழர் ஹுதைபாவின் அறிவிப்பிலிருந்து தெளிவாகின்றது. இந்த வகையில் இரு அறிவிப்புகளுக்கிடையிலும் முரண்பாடு இருப்பதாகக் கூற முடியாது.

சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குபற்றி விளக்கவந்த இமாம் நவவி, 'அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பது எனக்கு மிகவும் விருப்பமானது. அதனை நின்ற நிலையில் செய்வதும் ஆகுமானதே, இரண்டிற்கும் நபி வாழ்வில் ஆதாரங்களுண்டு என்கிறார்.

Source: AC Agar Mohamed (Plus*) (*..man was created weak: Quran)